Monday, 19 September 2016

“Father of Indian Prehistory- Robert Bruce Foote”

I took a photograph of his graveyard when I visited… a legend... - Dr. PriyaKrishnan


*Robert Bruce Foote joined in Geological Survey of India in September 1858 when he was a Youngman of 24 years and retired as a Senior Superintendent in 1891 at the age of 57, after an active service of 33 years. The greater part of his service was spent in South India mostly in the Madras Presidency, where he worked in conjunction with Dr.W.King on the Cuddapah and Kurnool systems. Much of our knowledge of the geology of the crystalline rocks of the Peninsular South and of the recognition and separation of the Dharwar system from the crystalline complex is due to his great labours spread over long years. His field – researches in the south also firmly established the division of the Archaean rocks into two entirely distinct systems. This geological division has been found to hold good for all other regions. His paper on “the Dharwar system, the chief auriferous rock series of South India “, is an important landmark in Indian geology. After he left the Survey in 1891, he worked for three years as a geologist for the Baroda state and published a useful monograph on the Geology and Mineral resources of the State. Later he helped the Mysore State to organize the state geological service. Later he took up his residence at Yercaud at Shevaroy hills in Salem district, and carried on almost single-handed his field –research both in Geology and Prehistory till 1904.

Besides his monumental work on the crystalline rocks of peninsular India, he also undertook with great success Palaeontological and Stratigraphical researches in the South. In Pleistocene Paleontology and Stratigraphy he made some important contributions. He discovered and described a new species of Rhinoceros from the cotton soil at Belgaum which he named as R.deccanensis. He also carried out explorations and excavations of the ancient caves of Billasurgam in Kurnool in 1864 and found a number of prehistoric fauna and artifacts. The fauna were later examined by Dr.Lydekker in 1866.

In the field of prehistory and Pleistocene Geology of India, he was a pioneer, aptly described as the “Father of Indian Prehistory”. Indeed, compared to his great work on solid geology, his work in Indian prehistory and Prehistoric Geology was even greater. He discovered a large number of stone – age sites in various parts of peninsular India. He made extensive studies on the geographical distribution of Paleolithic and Neolithic sites and on tool techniques and typological classification. It was on the 30th of May, 1863, that he made the momentous discovery of unearthing the first Paleolithic Hand axe from lateric gravels at Pallavaram in Madras, followed up by further finds in Attrampakkam Nullah in September 1863 in the same district. By 1864 he became a confirmed collector, and with increasing years his enthusiasm for prehistory increased. In 1868 Foote took Indian prehistory to England, when he read two interesting papers on his discoveries. The first was read before the Geological Society of London and the second before the international Prehistory Congress at Norwick. In 1873 the International Exhibition at Vienna displayed a part of his collections.

Working between 1863 and 1904 Foote discovered as many as 459 prehistoric sites in peninsular India, among these 42 sites belonged to the Paleolithic age and 252 to the Neolithic. His massive collections of prehistoric artifacts now housed in the Madras Museum and in the Indian Museum Calcutta,  are a veritable treasure for research scholars in India prehistory. The greatest value of the Foote collection is the light it throws on the horizontal and vertical distribution of archaeolithic cultures in India. Many scholars in this country have fruitfully followed up Bruce Foote’s trail of work in many regions of southern and western India and are extending further his discoveries. His basic field date recorded from many sites has been utilized in  further increasing further our knowledge of Indian prehistory in later years. His meticulously detailed investigations in different aspects of Prehistory and Geology of early man in India – need a thorough appraisal to-day. It was he who first attempted scientific studies on correlations between Prehistory and Geology in India. His publications distributed over a wide range of journals in India have laid the foundation of our knowledge in this twin field of science of Prehistory and Geology of India. It was he who first brought to light the problem of the hiatus between the formations containing Paleolithic and Neolithic artifacts in South India. This is theory with which John Evans may be mentioned, who in 1859 pointed out the existence of a great gap or hiatus in Europe. In the same year, the authenticities of ‘Boucher de Perthes’ handaxes of Abbeville were scientifically admitted. So it then appeared to Bruce Foote that the existence of a similar gap is supported by geological features as exposed on the right bank of the Sabarmati River in Gujarat. This was later followed up by Krishnaswami and Sankalia who found microliths insitu in the loess mounds. But the sterile layers that separate the Paleolithic gravel and silt phases from the dune soils containing microliths in Gujarat remain to be accounted for.

Foote’s discovery of microliths embedded in the fossil dunes (Teris) at Tinnevelly near the tip of the Penninsula was followed up by Aiyappan and later Zeuner and Allchin, confirming a high antiquity (Mesolithic) of the Teri industry. The occurrence of prehistoric ash mounds in the Deccan, first noticed by Mackenzie and later by Newblod, was followed up by Bruce Foote in1872, who recorded over a dozen of such sites and first pointed out that the mounds are of cow dung and are of Neolithic origin (later confirmed). Allchin followed up Foote’s hypothesis and confirmed it in his recent publication on the “Neolithic cattle keepers if south India”. Foote’s observations have been further extended and fruitfully utilized by a number of Indian and foreign scholars. His extensive collection of prehistoric artifacts form various parts of Madras, Mysore, Hyderabad and Baroda was purchased by the Madras Museum in 1904 and a special hall was built for its reception in the Archaeology section in the Madras Museum. It was then proposed that a Catalogue of the entire collection should be prepared by Foote himself. By the end of 1908 the specimens had already been numbered and arranged. The completion of the catalogue, was however, unfortunately retarded by his ill – health and failing eye-sight during the last year of his life. The Catalogue in two volumes was posthumously published in 1914 by the Madras Government Museum. Mr.Bruce Foote died on the 29th December 1912 at the ripe old age of 78 years.

*(Details collected from various sources of internet articles) 

Tuesday, 6 September 2016

ஆலாம்பரைக் கோட்டை

மரக்காணத்திற்கு முன்னதாக – கடற்கரை சாலையிலிருந்து மூன்று கி.மீ கடலை நோக்கி பயணித்தால் வரும் இந்த புராதன இடம்.

இடது சுவர்ப்பகுதி முழுதும் கடலலைகள் மோதவெறும் மணற்குவியலாக காட்சியளிக்கும் இந்த கோட்டைக்கு வெளியே, சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் மீனவக் கிராமம் ஒன்றையும் பார்க்க முடிகிறது. அங்கிருக்கும் மீனவர்களுக்கு வருமானம் என்பது மீன்பிடித் தொழில் மற்றும் அங்குவரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு படகுசவாரி செய்வதன் மூலம் கிட்டுகிறது.


கி பி 17-லிருந்து 18-ஆம் நூற்றாண்டுக்குள் கட்டப்பட்ட இந்தக் கோட்டையினை, கி பி 1750-ல் ஆங்கிலேயரை எதிர்க்க உதவிய பிரெஞ்சு தளபதி டியூப்ள்ஸ்க்கு, சுபேதார் முசாபர்ஜங் பரிசளித்துள்ளார். கி பி 1760-ல் பிரெஞ்சுப் படையினை வெற்றிக் கொண்ட ஆங்கிலேய படை இக்கோட்டையினை கைப்பற்றிச் சிதைத்துள்ளது
 
மழைக்காலங்களில் சரிந்து விழும் சுவர்களும், உப்புக்காற்றில் கரையும் கற்களும், மரங்கள் படர்ந்து மறைக்கப்பட்ட மதில்களும் இன்னும் எத்தனை நாளைக்கு இருக்கும் எனத் தெரியவில்லை..காரணம்காலத்தின் கரங்கள் இதன் தோற்றத்தை வெகுவாக சுரண்டிக்கொண்டிருக்கின்றனதொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டுள்ள போதிலும்.

செங்கல் மற்றும் சுண்ணாம்பு கலவையைக் கொண்டு சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்ட இக்கோட்டை இப்போது சிதைந்த நிலையிலும் தனது சமகால வரலாற்றை நினைவுப் படுத்திக் கொண்டுதான் நிற்கிறது. இக்கோட்டையின் அன்றைய நாணயச் சாலையின் பொறுப்பு அதிகாரத்தை வகித்தபொட்டிபத்தன்என்பவர், கடப்பாக்கம் காசி விஸ்வநாதர் கோவிலையும் அதனருகில் ஒரு குளத்தையும் வெட்டினான். அது
மட்டுமல்லாது காசி யாத்திரை செல்லும் யாத்திரிகர்கள் தங்கிச் செல்வதற்கு ஏதுவாக ஒரு சத்திரத்தையும் கட்டி வைத்தான்.

இது காசிப்பட்டை என இன்றும் குறிப்பிடப்பட்டுஅந்த பெருவழி தற்போது கோட்டைக்கு மேற்கில் 2 மைல் தூரத்தில் செல்கிறது.
*

தொல்லியல் துறையால் இங்கு வைக்கப்பட்டுள்ள பலகையில் எழுதப்பட்டுள்ள வரலாறு… கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள ஆலம்பரை, பண்டைய நாளில் ஒரு துறைமுகப் பட்டினமாகத் திகழ்ந்துள்ளது. சங்ககால இலக்கியமான சிறுபாணாற்றுப்படையின் மூலம் இப்பகுதி இடைக்கழி நாடு என பெயர் பெற்றிருந்ததாக அறியப்படுகிறது. கி.பி.18 ஆம் நூற்றாண்டில் முகமதியர்களால் ஆலம்பரையில் கோட்டை கட்டப்பட்டது.


செங்கற்களாலும் சுண்ணாம்பினாலும் கட்டப்பட்ட சதுர வடிவிலான கண்காணிப்பு நிலை மாடங்களுடன் அமைந்துள்ள இக்கோட்டை சுமார் 15 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது
நவாபுகளின் ஆட்சிக்காலத்தில் ஆலம்பரை துறைமுகப் பட்டினமாக திகழ்ந்துள்ளது. இக்கோட்டையின் கீழ்ப்புறம் படகுத்துறை ஒன்று கப்பலில் உள்ள பொருட்களை ஏற்றி இறக்க அமைக்கப்பட்டுள்ளதுபடகுத்துறையின் நீளம் சுமார் 100 மீட்டர் ஆகும்
அவற்றின் பகுதிகள் தற்போதும் காணப்படுகின்றன.

ஆலம்பரை படகுத்துறையிலிருந்து சரிகைத் துணிவகைகள், உப்பு, நெய் போன்றவை
ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. ஆலம்பரையில் அமைந்திருந்த நாணயச் சாலையில், ஆலம்பரைக் காசு, ஆலம்பரை வராகன் ஆகிய நாணயங்கள் அச்சடிக்கப்பட்டன. இந்நாணயச் சாலையின் பொறுப்பாளராக இருந்த பொட்டிபத்தன், கிழக்கு கடற்கரை வழியாக காசி, இராமேஸ்வரத்திற்கு தீர்த்தயாத்திரை செல்லும் யாத்திரிகர்களுக்காகச் சிவன் கோயிலையும், பெரிய குளம் மற்றும் சத்திரத்தினையும் ஏற்படுத்தினார். .தமிழ்நாடு தொல்லியல் துறை இச்சின்னத்தினைப் பராமரித்து பாதுகாத்து வருகிறது
 *
தொல்லியல் துறையினரால் அகழ்வாராச்சி செய்யப்பட்டு, ஆற்காடு நவாப் தோஸ்த் அலிகான் காலத்தில் பயன்படுத்திய கல்லால் ஆன பீரங்கிக் குண்டுகள், ஈயக் குண்டுகள், பீங்கான் பாத்திரங்கள், மண்பானை ஓடுகள்,  காசுகள் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட செப்பால் ஆன ஆலம்பனப் பொருட்களின் மிச்சங்கள், புகைப் பிடிக்கும் சுருள் குழாய்கள், இரும்புக் கழிவுகள், விலங்குகளின் எலும்புகள் போன்றவை மட்டுமின்றி,  குழந்தைகளின் விளையாட்டில் பயன்படும் வட்டச்சில்லுகள், வட்டச்சுற்றி, தாயத்து, கண்ணாடிப் பொருட்கள் போன்றவையும் கிடைத்துள்ளன

சுற்றுலாவாசிகள் வந்துபோகும் இக்கோட்டையும் அதனை சார்ந்து அமைந்துள்ள கடற்கரை மிக ரம்மியமாகக் காட்சி அளிக்கிறது. வரலாற்றுச் சுவடுகளை இன்றும் பறை சாற்றிக் கொண்டிருக்கும் இந்த ஆலபராக் கோட்டையினை பாதுகாக்க வேண்டியது நமது கடமையாகும்..

  வல்லம் ஏகெளரி அம்மன் - சிறப்புப் பார்வை முனைவர் பிரியாகிருஷ்ணன். பதிவு செய்த நாள் : 25.02.2024 அமைவிடம்: தஞ்சைக்கருகில் வல்லம் என்ற ஊரில...