கள ஆய்வும், கண்டுபிடிப்பும்:
முனைவர் பிரியா கிருஷ்ணன்
தியாகதுர்க்கம் எனும் ஊர்
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி வட்டத்தில் விழுப்புரத்திலிருந்து
கள்ளக்குறிச்சி செல்லும் சாலையில் 50 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
வாழ்விடப்பகுதி
இரும்புக்கால மற்றும் வரலாற்றுத்
தொடக்ககால வாழ்விடப்
பகுதியானது
சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. வாழ்விடப்பகுதி 1.5 மீ
அளவு உயரம் காணப்படுகிறது. குவளை, கருப்பு-சிவப்பு-பானை ஓடுகள், சிவப்பு பானை
ஓடுகள், கருப்பு பானை ஓடுகள், காவிவண்ணம் பூசப்பட்ட கருப்பு-சிவப்பு-பானை ஓடுகள்,
ரௌலட்டட் பானை ஓடுகள் போன்றவையும், வட்ட சில்லுகள், இரும்பு கத்தி, பளபளப்பான கைக்கோடாரிகள், கல் சுத்தியல்கள் மற்றும் சீன நாட்டு பீங்கான் ஓடுகள் போன்றவையும் கண்டறியப்பட்டுள்ளன.
இவ்விடத்திலிருந்து தென்மேற்கே 2
கி.மீ தொலைவில் நத்தக்காடு என்ற இடத்தில் 30 ஏக்கர் பரப்பளவில் வரலாற்றுக்கால
வாழ்விடப்பகுதி கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாழ்விடப்பகுதியில் வரலாற்றுக்கால பானை
ஓடுகள் மற்றும் வட்ட வடிவ சில்லுகள் கண்டறியப்பட்டுள்ளன.
குறியீடுகள்
பானை ஓடுகளில் பல விதமான
குறியீடுகள் மற்றும் வண்ணம் தீட்டப்பட்ட பானை ஓடுகள் போன்றவையும் கிடைத்துள்ளன.
குறியீடுகளில் நட்சத்திர வடிவம், ஏணி வடிவம், கூட்டல் வடிவம் மற்றும் பல
குறியீடுகள் கண்டறியப்பட்டுள்ளன.
இவற்றில் கூட்டல் வடிவ குறியீடை தவிர மற்ற குறியீடுகள்
கொடுமணல், பொருந்தல் மற்றும் பிற இடங்களில் கிடைத்துள்ளன.
இரும்பு உருக்கு உலை
வாழ்விடப்பகுதியில் இரும்பை உருக்க பயன்படுத்தப்பட்ட உலைகள்
அதிக அளவில் காணப்படுகின்றன.
ஒரு உலையின்
நீளம் 165 செ.மீ, அகலம் 43 செ.மீ அளவில் உள்ளது. இரும்பு
கழிவுகள், இரும்பை உருக்க பயன்படுத்தப்பட்ட
ஊதுளைகள் மற்றும்
கத்தி போன்றவையும் கண்டறியப்பட்டுள்ளன.
ஈமக்காடு
இரும்புக்கால/வரலாற்றுத்தொடக்க கால ஈமச்சின்னமான முதுமக்கள்
தாழிகள் வாழ்விடப்பகுதியின் மையப்பகுதியில் தற்போதுள்ள சாலையின் இருபுறங்களிலும்
காணப்படுகின்றன.
முதுமக்கள் தாழியானது வாழ்விடப்பகுதியின் பாதியளவுள்ள
மண்ணடுக்கில் காணப்படுகிறது. இந்த முதுமக்கள்தாழிக்கு கீழும் வாழ்விடப்பகுதியின் மண்ணடுக்கு
காணப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.
No comments:
Post a Comment